/ ஆன்மிகம் / திருமுறையுள் கருத்தும் கதையும்
திருமுறையுள் கருத்தும் கதையும்
கருத்தை கதையோடு சொல்லி விளங்க வைக்கும் உத்தியை வெகு சிறப்பாகக் கையாண்டிருக்கும் நுால். திருமுறைப் பாடல்கள் சுருக்கமாகச் சொன்னவற்றை சுவையாக விளக்கிய பாங்கு, புத்தகத்தின் 30 அத்தியாயங்களிலும் விரவிப் பரவியுள்ளது. நயங்களுக்குப் பஞ்சமில்லை.கந்தர் அலங்காரம், திருமந்திரம், சிவராத்திரி புராணம், அபிராமி அந்தாதி, பட்டினத்தார் பாடல் என்று மேற்கோள்கள் காட்டியுள்ளார். சிவ தலங்களுக்கு அழைத்துச் சென்று பரவசப்படுத்துகிறார்.‘கனிக்கும், கரும்புக்கும் எட்டா இனியவன்’ போன்ற அத்தியாய தலைப்புகள், புத்தகத்தை கீழே வைக்க விடாமல், கவனத்தை திசை திருப்ப விடாமல் செய்கின்றன. படித்து அனுபவித்தால் புரியும்.–- பிரபு சங்கர்