/ ஆன்மிகம் / திருத்தலங்கள் வரலாறு
திருத்தலங்கள் வரலாறு
தேவாரப் பதிகங்களை பதிப்பித்த போது உ.வே.சா., தொகுத்த குறிப்புகளால் உருவாக்கப்பட்டுள்ள நுால். சைவத் திருத்தலங்கள், அவற்றின் அமைவிடங்கள், அருள்புரியும் சுவாமி, அம்மன் பெயர், தீர்த்தங்கள், தல விருட்சம் போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன. திருத் தலங்கள், சுவாமி, அம்மன் அருட்செயல்களை விவரிக்கும் புராண செய்திகள் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புராணக் கதைகள் பல்வேறு நுால்களில் இடம்பெற்றவை. தேன் போல் ஒரே கூட்டில் தொகுத்து தரப்பட்டு உள்ளன. தேவாரம், திருவாசகம் திருத்தலங்கள், இறைவனின் பெருமைகளை அறிவிக்கிறது. ஆய்வாளர்களுக்கும் பெரிதும் பயன் தரும் நுால். – சிவா




