/ தமிழ்மொழி / திருவள்ளுவர் சொன்னதும் சொல்லாததும்
திருவள்ளுவர் சொன்னதும் சொல்லாததும்
எண்:7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை - 17. (பக்கம்: 368) தமிழர்களின் உணர்வுக்கும், பெருமைக்கும் திருக்குறள் ஒரு தலைசிறந்த நூல் என்பதில் ஐயமில்லை."வள்ளுவன் தன்னை உலகினுக்கே, தந்து - வான் புகழ்கொண்ட தமிழ்நாடு என்று பாடி மகிழ்ந்தார் மகாகவி பாரதியார். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு எத்தனையோ அறிஞர்கள் உரையெழுதி, திருக்குறளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இந்நூலாசிரியர், திருக்குறளை மேலும் விளக்கிச் சொல்வார் என்று எதிர்பார்த்து, நூலைப்படித்தால் குழப்பம் தான் ஏற்படுகிறது; நூலாசிரியர் கூறும் சில செய்திகள் படிக்கவே கூச்சமாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பக்கம் 80 இல் உள்ள செய்தியைக் கூறலாம்.பெருமைமிக்க இப்பதிப்பகத்தார்க்கு இந்நூல் பெருமை சேர்க்காது, இந்நூலைப் படிக்காமல் இருப்பதே, நாம் வள்ளுவர்க்குச் செய்யும் சிறந்த மரியாதை ஆகும்.