/ கதைகள் / தித்திக்கும் காதல் தேனாய்

₹ 320

கடந்த காலத்தை நினைத்து கொண்டிருந்தால், எதிர்கால நிலைமை என்னாகும் என்ற உண்மையை உணர்த்தும் நாவல். எப்போதோ முடிந்த நிகழ்ச்சியை மனதில் வைத்து, இளைய தலைமுறைக்கு வன்மத்தை வளர்த்து விடும் பெற்றோர் ஒருபுறம். கசப்புகளை மறந்து, புதிய வசந்தத்தை வரவேற்க விரும்பும் புதிய தலைமுறை மறுபுறம். பெண் பார்க்கும் படலத்தில் அரங்கேறி, எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்துள்ளது. காதலிப்பவன் சாதாரண குடும்பத்தவன் என்றாலும், அறிவுக்கு சொந்தக்காரன் என்பதை கண்டு உள்ளத்தை தந்து, உயர் பதவியில் அவன் அமர்ந்த பின், கரம் பிடிப்பது கதையின் சிறப்பம்சம். விறுவிறுப்பு குன்றாது விவரிக்கப்பட்டுள்ளது. வாசிப்போரை திகைப்புக்கு உட்படுத்தும் நாவல் நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை