/ புத்தக மதிப்புரை / துாக்கணாங்குருவி
துாக்கணாங்குருவி
அஞ்சலை, அனிதா, பரிமளா என பெண்கள் பெயரில் தலைப்புள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். ‘அஞ்சலை’ கதை திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் பொன்னையும் பொருளையும் தேடி அலைவதையும், பெண்ணை பெற்றவர் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் எடுத்துரைக்கிறது. பாதிக்கப்பட்ட தாய், பெண்ணை புதுமையாக வளர்த்து வெற்றி பெற வைப் பதை கூறுகிறது. பதவி வரும்போது பணிவு வர வேண்டும் என்ற நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட சிறுமி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டதை, ‘அனிதா’ சிறுகதை எடுத்துரைக்கிறது. பெற்றோர் கடைசி காலத்தில் பிள்ளைகளை நம்பி இருக்கக்கூடாது என்பதை எடுத்துக்காட்டுகிறது. கருத்துக்கள் நிறைந்த சிறுகதை நுால். – வி.ராமலிங்கம்




