/ கதைகள் / தூக்கத்தைத் தின்றவர்கள்
தூக்கத்தைத் தின்றவர்கள்
சென்னையின் வட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். நினைவானவன் துவங்கி, புதைந்தே வாழ்ந்தவன் என்பது வரை 25 சிறுகதைகள் உள்ளன. சைக்கிளில் ஐந்து நாட்கள் அமர்ந்தபடியே, உண்டு, உறங்கிய உணர்வுகளை சொல்லும், ‘நினைவானவன்’ கதை, அந்த காலத்திற்கு அழைத்து செல்கிறது. உடல் உழைப்போரிடம் போதை வாஸ்துகள் ஒட்டி கொள்வதை, திருநங்கைகளின் மனிதாபிமானம் என்ற கதை உணர்த்துகிறது. மனநலம் பாதித்தவர் பற்றிய கதை மனிதாபிமானத்தை போதிக்கிறது. மக்கள் மீதான வன்முறை பார்வையை தகர்த்து இயல்பை அலசுகிறது. தனிமனித சிக்கல், குடும்பம், சமூக, பொருளாதார நிலையின் பின்னணியுடன் பார்த்து சம்பவங்களை மனித உணர்வுகளுடன் பொருந்தும் தொகுப்பு நுால்.– டி.எஸ்.ராயன்