/ வாழ்க்கை வரலாறு / தோழர் லெனின்
தோழர் லெனின்
நில பிரபுக்களின் ஆட்சியைக் கண்டித்து ரஷ்யப் புரட்சியை வழிநடத்தி பொதுவுடைமை சித்தாந்தத்தை நிறுவிய விளாடிமிர் லெனின் வாழ்க்கை பயணத்தை தொகுத்து தரும் நுால். ஜார் மன்னன் கொடுங்கோலாட்சியை எதிர்த்து குரல் கொடுத்தது பற்றிய விபரங்கள் உள்ளன. முறையான கோட்பாடுகளுடன் போராடி வெற்றி கண்டதை உரிய திருப்பங்களுடன் சுவை குன்றாமல் பதிவு செய்துள்ளது. ரஷ்யாவில் மாணவப் பருவத்தில் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்த விபரங்கள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. மாபெரும் அறிஞர் கார்ல் மார்க்ஸ் கோட்பாடுகளால் கவரப்பட்டு, தொழிலாளர்களை விடுவிப்பதில் எழுச்சிமிக்க செயல்பாடுகளை விரிவாக முன்வைக்கிறது. பொதுவுடைமை கருத்தை அள்ளி தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




