/ கட்டுரைகள் / உலகத் தமிழர் கலைக்களஞ்சியம்
உலகத் தமிழர் கலைக்களஞ்சியம்
தமிழுக்கு பெருமை சேர்த்த அறிஞர், கல்வியாளர்கள் செய்த பங்களிப்புகளை தரும் நுால் மறுபதிப்பாக மலர்ந்துள்ளது. அகரவரிசைப்படி, 198 கட்டுரைகள் தமிழர் சமுதாய செய்திகளை அள்ளி தருகின்றன. தமிழ் மொழிக்கு தன்னலமின்றி தொண்டு செய்தோரின் வாழ்க்கை வரலாற்று தடங்கள், பண்பாடு, வணிகம், தமிழியக்கம், தமிழிலக்கிய வரலாறு போன்ற அரிய செய்திகள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து தமிழ் பணியாற்றிய அறிஞர்கள், அரசியல் மேதைகள், அறிவியல் வல்லுனர்கள், இலக்கிய படைப்பாளர்கள் என பலரையும் அடையாளம் காட்டுகிறது. தமிழ் வளர்ச்சி பணிகள் பற்றிய செய்திகளை தாங்கிய கருவூலமாக விளங்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




