/ கட்டுரைகள் / உணர்வால் முடியும்

₹ 270

வாழ்க்கையில் வெற்றியும் நிம்மதியும் பெற உணர்வுகளை பயன்படுத்தும் வழிமுறைகளை விளக்கும் நுால்.வாழ்வில் வெற்றி பெற அவசியமானது எது, தொழிலில் வெற்றி குவித்தோர் சொந்த வாழ்வில் சோதனை அனுபவிப்பதை கேள்வியாக்குகிறது. நிம்மதியற்று பணக்காரர் தவிப்பது பற்றி கூறப்பட்டுள்ளது. திறமை, பணம், புகழ் இருந்தும் வாழ்வின் முழுமையற்ற நிலையை கேள்வியாக்கி உணர்வுபூர்வமாக ஆராய்கிறது.உணர்வுகளால் வாழ்வை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்பதை 72 அத்தியாயங்களில் சொல்கிறது. மனித உணர்வு எப்படிப்பட்டது என அறிய வைக்கிறது. அதை கையாளும் வழிமுறைகள், கட்டுப்படுத்த வேண்டிய உளவியல் விஷயங்களை எளிமையாக விளக்குகிறது. உணர்வுகளை கொண்டு உலகை வெல்லும் உத்தியை சொல்லி தரும் புத்தகம்.– ஊஞ்சல் பிரபு


சமீபத்திய செய்தி