/ கதைகள் / உண்மைக்கும் உண்டு அடைக்கும் தாழ்!
உண்மைக்கும் உண்டு அடைக்கும் தாழ்!
குற்றச் செயலை மையப்படுத்தியுள்ள விறுவிறுப்பான நாவல் நுால். முத்தையாவின் மகனான சக்திவேல் வழக்கறிஞராகி அரசியலில் பிரகாசிக்க விரும்புகிறான். இளைஞனான அவன் அரசியல்வாதியானால் பொய்யோடு வாழ வேண்டியிருக்கும் என அறிவுரைக்கிறார் தந்தை. அது எவ்வளவு உண்மை என்பதை உணர்த்த, கதை ஒன்றை கூறுகிறார்.அந்த கதையில் சிறந்த செஸ் ஆட்டக்காரர், மனைவியை கொலை செய்து விடுகிறார். பின், வழக்கறிஞர் சொன்னபடி செயல்பட்டு வழக்கில் குளறுபடி செய்கிறார். சம்பந்தமில்லாத அப்பாவிக்கு தண்டனை கிடைக்கிறது. அவன் மனமுடைந்து தற்கொலை செய்கிறான். செஸ் ஆட்டக்காரர் கடலில் மூழ்கி இறக்கிறார். இப்படி விறுவிறுப்பாக பின்னப்பட்ட நாவல்.– முனைவர் கலியன் சம்பத்து