/ புத்தக மதிப்புரை / உருகும் பொழுதுகள் உன்னோடு
உருகும் பொழுதுகள் உன்னோடு
நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சமூக நாவல். முதல் பக்கத்தில் அறிமுகமாகும் கதை நாயகி, இறுதி வரையிலும் தொடர்ந்து நிறைவு செய்கிறாள். பெண்களின் அலுவலக சூப்பர்வைசரின் அச்சுறுத்தலை மீறிய பணி, நகரப் பேருந்தின் இடிபாடுகளுக்கு இடையில் இலவச பயணம் செய்து வாழ்வதை மையமிட்டு கதை நகர்கிறது. குடும்ப அமைப்பு, சிறப்பை தெளிவுபடுத்துகிறது. மாமியார், அண்ணி, வீடு நிறைய சொந்தங்கள் என குடும்ப வாழ்வில் குதுாகலத்திற்கு அழைத்து செல்கிறது. நகரத்தில் விபத்துகள், விபத்தை தொடர்ந்து நடக்கும் பேச்சுகள் என கண்முன் காட்டுகிறது. பெண்களின் மன, உடல் நிலையை வெளிப் படுத்துகிறது. பெண்களின் வாழ்க்கையை நாமே படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் நாவல். – முகிலை ராசபாண்டியன்




