/ சுய முன்னேற்றம் / உதிரிப் பூக்கள்
உதிரிப் பூக்கள்
சுவாரசியம் மிக்க தகவல்களின் தொகுப்பு நுால். தன்னம்பிக்கையுடன் முன்னேற்றத்தை துாண்டும் வகையில் அமைந்துள்ளது. நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், கல்லுாரி வாழ்க்கையின் போது, படித்து குறிப்பெழுதியிருந்தவை தொகுக்கப்பட்டுள்ளன. சாதனைக்கு வயது தடையில்லை என்பதை கூறுகிறது. உலக அளவில் நடந்த சாதனைகளை குறிப்பிடுகிறது. உழைப்புக்கு வயது தடையில்லை என்கிறது. பிரபலமானோர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. உணவு சார்ந்த சிந்தனையை ஊட்டுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உரிய ரகசியங்களை, வெற்றி பெற்றோர் வாழ்வில் இருந்து எடுத்துக் கூறுகிறது. வியப்பு ஏற்படுத்தும் பொன்மொழிகளும் உள்ளன. பல்சுவை தகவல்களின் களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால். – ராம்




