/ கட்டுரைகள் / உயிர்க்காடு
உயிர்க்காடு
எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய 10 நாவல்களை விமர்சன பார்வையில் எழுதிய கட்டுரை தொகுப்பு நுால். தேவதாசி முறை ஒழிப்பு போராட்டக் காலத்தில் வெளிவந்த ‘அமிர்தம்’ நாவலின் தாக்கத்தை விவரிக்கிறது. எளிய மக்களின் பிரதிபலிப்பாக வெளிவந்த, ‘மோகமுள்’ குறித்து கூறுகிறது. சில நுாறு பக்கத்தில் சொல்வதை, ஒரே வரியில் எடுத்துரைக்கும் திறனை கூறுகிறது. ஜாதி, மத பிரிவினையை கூறியதை பேசுகிறது. காதலின் வலிமையை, உறவின் சிக்கலை பகிர்கிறது. மனித உள்ளங்களில் சறுக்கல்களை சொல்கிறது. கதை, நாவல் எழுத முயற்சிப்போருக்கு உதவும் நுால்.– டி.எஸ்.ராயன்