/ வரலாறு / வதை முகாம்களின் சொல்லப்படாத வரலாறு!

₹ 320

உலகப்போரின் போது, ஐரோப்பாவில் அமைக்கப்பட்டிருந்த வதை முகாம்கள் பற்றி விவரிக்கும் நுால். ஐரோப்பிய நாடான செக்கோஸ்லோவோக்கியாவை ஜெர்மனியும், ஹங்கேரியும் 1939ல் கைப்பற்றின. இதையொட்டி, யூதர்களுக்கு எதிராக வதை முகாம்கள் உருவாகின. அதில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் அனுபவத்துடன் துவங்குகிறது. யூதர்கள் வரலாற்றை பின்னோக்கு பார்வையில் முன்வைக்கிறது.நாஜிக்களின் வதை முகாம் கொடுமைகளை எடுத்துரைக்கிறது. யூதர்களில் ஒரு பிரிவினர் செய்த கொடூர செயல்கள், பின்னர் எதிராக திரும்பியதை கோடிட்டு காட்டுகிறது. மனிதாபிமானமற்ற அதிகார செயல்பாடு பற்றி விவரிக்கிறது. யூத இனத்தவர் வாழ்க்கையில் சிதைவு ஏற்பட்டதை கண்முன் காட்டும் நுால்.– முகிலை ராசபாண்டியன்


புதிய வீடியோ