/ பொது / வயதை வெல்லும் வாலிபர்கள்
வயதை வெல்லும் வாலிபர்கள்
மனித நேயமுள்ள 50 பேரின் சாதனைகளை அடையாளம் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். ஆர்ப்பாட்டமின்றி செய்த தொண்டுகளை எடுத்துரைக்கிறது. ஆதரவற்றோர் மரணமடையும் போது இறுதிச் சடங்குக்கு பொறுப்பேற்கும் ஆத்மார்த்த சேவையாற்றுபவர் பற்றி குறிப்பிடுகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகளை பொருட்படுத்தாமல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுபவரின் செயலை பெருமைப்படுத்துகிறது. சேவைக்கு வயது தடையாக இருப்பதில்லை என்பதை பறைசாற்றும் வகையிலான உள்ளடக்கம் அமைந்துள்ளது. சேவை பற்றிய செய்திகள் மட்டுமின்றி, அதை மனப்பூர்வமாக செய்வோரிடம் உள்ள சுவாரசியங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அர்ப்பணிப்புடன் வித்தியாசமாக சேவை பணியாற்றுவோரை அறிமுகம் செய்யும் நுால். – ஒளி




