/ கதைகள் / வாழ்க்கை ரொம்ப பெரிசு

₹ 150

பெண்களின் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, நம்பிக்கை தரும் முடிவுகளை முன்வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வேலைக்கு செல்லும் பெண் களுக்கு அன்றாடம் ஏற்படும் சிக்கல்களை சில கதைகள் சித்தரிக்கின்றன. வலுவான காரணங்கள் இன்றி குடும்பத்தில் சேர்ந்து வாழ மறுக்கும் பெண்களின் மனநிலையை அலசி, தீர்வு சொல்லும் கதைகளும் உள்ளன. கோபம், சண்டை, அன்பு, சல்லாபம் நிறைந்தது தான் வாழ்க்கை என்பதை முன்வைத்து, நல்லறிவூட்டும் வகையில் கருத்துள்ள படைப்பும் உள்ளது. அதே நேரம் எல்லா தீமையையும் சகித்து, சேர்ந்து வாழ்வது தான் பெண்ணுக்கு சிறப்பு என்பது அறிவுப்பூர்வமாக மறுத்துரைக்கப்பட்டு உள்ளது. பலதரப்பட்ட சூழல்களை அலசி, கதாபாத்திரங்களாக உருவாக்கி படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை