/ வரலாறு / வீரமிகு அலெக்சாண்டர்

₹ 100

பக்கம்: 323 மாவீரன் அலெக்சாண்டரின் பல பரிமாணங்கள், இதில் பேசப்படுகின்றன. அலெக்ஸ், தத்துவ ஞானி அரிஸ்டாட்டிலின் மாணவர். தன் மாணாக்கனுக்கு அவர் சொல்லிக் கொடுத்தது இதுதான்;"உண்மைக்கும் நீதிக்கும் கண்டிப்பாகத் தலைவணங்க வேண்டும். குறிப்பாக, ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் கட்டாயம், அப்படித்தான் இருந்தாக வேண்டும்.பியூபேலஸ் என்ற குதிரையை அடக்கி, அக்குதிரையையே அலெக்ஸ் பரிசாகப் பெற்றதில் இருந்து ஆரம்பித்து, அவரது மரணம் வரை, பல முக்கிய நிகழ்ச்சிகளை ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.அலெக்சாண்டரின் கடைசி ஆசை:""இந்த கல்லறையில் உறங்குபவன், உலகை வென்றவன் என்று பொறித்து விடுங்கள்! ஆனாலும், போகும்போது எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று, எல்லாரும் தெரிந்துக் கொள்ளவே, கைகள் வெளியே தெரிய வேண்டும்! ஒரு நாவலைப் போல் செல்லும், சுவாரஸ்யமான சரித்திர நூல்!


சமீபத்திய செய்தி