வெள்ளோட்டம் வெல்லட்டும்
விமானம், கப்பல், பீரங்கி, ஏவுகணை, கனரக வாகனங்கள் தயாரிப்பில் கடைப்பிடிக்கப்படும் வினோத நடைமுறைகளை விவரிக்கும் நுால். வெள்ளோட்டத்தில் பின்பற்றப்படும் சோதனை முறைகளையும் சுவாரசியமாக தருகிறது. விமானத்தில் பாதிப்புகளை தவிர்க்க, கட்டு மானத்தின் போதே கடைப்பிடிக்கப்படும் உத்திகள் விளக்கப்பட்டுள்ளன. அதை பரிசோதிக்க எடுக்கப்படும் செயல்முறை விபரங்களும் தரப்பட்டுள்ளன. தேச பாதுகாப்பில் பயன்படுத்தும் பீரங்கி, ஏவுகணை தயாரிப்பில் பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்தும் விவரிக்கிறது. வெள்ளோட்டம் நடத்தும்போது கடைப்பிடிக்கப்படும் தரச்சோதனை நடைமுறைகள், ஆர்வமூட்டும் வகையில் தரப்பட்டுள்ளன. கருவிகளை தரச் சோதனைக்கு உட்படுத்தும் போது கடைப்பிடிக்கும் பாதுகாப்பு நடைமுறைகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் சந்திக்கும் அவதி பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு தேர்வு செய்யும் பகுதிகள் பற்றியும் சுவையான செய்திகள் உள்ளன. இதுவரை அறிந்திராத வியக்க வைக்கும் தொழில்நுட்ப தகவல்கள், 21 தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. தேசத்தை பாதுகாக்கும் சேவைப்பணியின் பின்னணியில் ஆர்வமூட்டும் தகவல்கள் நிறைந்துள்ளன. அவை அறிவுப்பூர்வமாக எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளன. அறிவியல் தகவல்களை எளிமையாக தந்து, வாசிப்பில் ஆர்வம் ஏற்படுத்தும் புதுமை நுால். – ஒளி




