/ கட்டுரைகள் / வென்று காட்டியவர்கள்

₹ 200

சாதனை புரிந்த தலைவர்கள், மேதைகள், தொழிலதிபர்கள் பற்றிய சுவையான தகவல்களை உடைய நுால். பனகல் அரசர், பிட்டி தியாகராயர், அப்துல் கலாம் உட்பட, 25 பேர் குறித்த செய்திகள் உள்ளன. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார், தொழில் துறை வளர்ச்சியின் அடையாளமாக விளங்கும் டாடா நிறுவனர், மும்பையை தலைமையகமாகக் கொண்ட பிர்லா குழும தலைவர் குமாரமங்கலம் பிர்லா என பலரை பற்றியும் கூறப்பட்டுள்ளது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்ஸ், யுடியூப் நிறுவனர் சாட் ஹார்லியின் வாழ்க்கைச் செய்திகளும், சாதனைகளும், போராட்டங்களும் பதிவாகியுள்ளன. வென்றவர்களின் மனதை காட்டும் நுால்.– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்


புதிய வீடியோ