/ கவிதைகள் / வெட்கப்படும் நெற்கதிர்
வெட்கப்படும் நெற்கதிர்
இயற்கை மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளை முன்வைக்கும் குறுங்கவிதைகளின் தொகுப்பு நுால். நீர்நிலைகள், அதில் துள்ளிக்குதிக்கும் மீன்கள், ஆகாயம், பூத்துக்குலுங்கும் மலர்கள் என, குதுாகலமாக உள்ளது. சமூக அவலங்களை சாடுகிறது. அருவியை ஆரத்தழுவிக் கொள்ளும் வகையில், ‘வீழ்ந்தாலும் கலகலவெனச் சிரிக்கிறது நீர்வீழ்ச்சி’ என, கற்பனையை விரிக்கிறது. பழந்தமிழக பகுப்பான ஐந்து வகை நிலங்களை காட்சிப்படுத்தும் விதமாக கருத்து செறிவுள்ள செய்திகளுடன் உள்ளது. வெறுப்புணர்வை முன்வைத்து, ‘சாதுவான யானை தோழனான பாகன் இரு வரையும் பிரிக்கிறது மதம்’ என, சாட்டையால் அடிக்கும் வகையில் கூறுகிறது. தேர்ந்தெடுத்த சொற்களின் பின்னணியில் ஓவியமாக மலர்ந்துள்ள நுால். – மதி




