/ சுய முன்னேற்றம் / விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
வாழ்வில் முன்னேற நியாயமான ஆசைகளை வளர்த்து, திட்டமிட்டு செயலாற்றி வெற்றியடைய வலியுறுத்தும் தன்னம்பிக்கை நுால். தகுதிக்கும் மீறிய பேராசையின்றி, அளவான ஆசைகளோடு உழைப்பவருக்கே வெற்றி கிடைக்கும் என அறிவுறுத்துகிறது. வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் ஆசைகளே விடாமுயற்சியோடு செயலாற்ற உந்து சக்தியாக அமைவதை விளக்குகிறது. உலகில் கண்டுபிடிப்புகளுக்கு ஆசையும், விடாமுயற்சியுமே காரணமாக விளங்கியதை தெளிவாக முன்வைக்கிறது. தனிமனித முன்னேற்றம், குடும்ப மேம்பாடு, வணிக சாதனைகளுக்கு அடிப்படை ஆசை என்கிறது. திட்டமிடல், திறமை வளர்த்தல், விடாமுயற்சிக்கு ஆசையே ஊக்கம் தருவதாக கூறுகிறது. இளைஞர்கள் படிக்க வேண்டிய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு