/ கதைகள் / விடாது விவாஹம்

₹ 400

தனித்துவமாக படைக்கப் பட்டுள்ள நாவல் நுால். திருமணத்தில் துவங்கும் பந்தம், குடும்பம், காதல், உறவுகள் சமூகம் என பறந்து விரிகிறது. கதாநாயகி யோகாவுக்கும், இனியனுக்கும் நிச்சயிக்கப்பட்ட பந்தமும், அதை எதிர்கொள்ளும் விதமும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய பெண்களின் எண்ண ஓட்டங்கள், ஆசா பாசங்களை விவரிக்கிறது. தாயின் பராமரிப்பின்றி வளரும் பெண்ணின் செயல்பாடுகளை துல்லியமாக காட்டியிருப்பது, தனித்த கவனத்தை பெறுகிறது. கணவன் – மனைவிக்கு கூடுதல் பொறுப்பை கொடுக்கும் தாம்பத்திய வாழ்வை இனிமையாக தெரிவிக்கிறது. திருமணத்தில் துவங்கி விரியும் வாழ்க்கை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தெள்ளிய நீரோட்டமாக விவரிக்கிறது. இளந்தம்பதியர் வாழ்க்கை அனுபவ நாவல். -– ஊஞ்சல் பிரபு


சமீபத்திய செய்தி