/ தீபாவளி மலர் / விகடன் தீபாவளி மலர் 2022

₹ 160

பல்சுவைகளுடன் மிளிர்கிறது விகடன் தீபாவளி மலர். சுவாரசிய தகவல்களுக்கு பஞ்சமில்லை. வரலாறு, சினிமா, கவிதை, நேர்காணல், இளமை என புதுமையுடன் பன்முகமாக ஒளி வீசுகிறது. சுவாமி விமுர்த்தானந்தரின் தீபாவளி வாழ்த்து செய்தியுடன் துவங்குகிறது. தீப ஒளி விளக்குகள் பற்றி படத்துடன் கூடிய சிறப்பு செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது.நடிகர் – நடிகையர் பேட்டி, அரசியல் நகைச்சுவை கட்டுரை என சரவெடியாக அதிர வைக்கிறது. பொன்னியின் செல்வன் நாவல் பற்றி சிறப்பு கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. வரலாற்றை பறைசாற்றும் அரிய போட்டோக்களும் பிரசுரமாகியுள்ளன. ‘டிசைன்’ பற்றிய பேட்டி கட்டுரை புது வெளிச்சம் பாய்ச்சுகிறது. பக்தி ரசம் சொட்டும் முழு பக்க சுவாமி படங்கள், குறிப்புகளுடன் இடம் பெற்றுள்ளன.அனைத்து தரப்பு வாசகர்களையும் திருப்திபடுத்தும் வகையில் ஆக்கங்கள் அமைந்துள்ளன. வண்ணச்சரம் தொடுத்து இனிமை பொங்க உருவாக்கப்பட்டுள்ளது, விகடன் தீபாவளி மலர்.– ஒளி


சமீபத்திய செய்தி