/ கட்டுரைகள் / விஞ்ஞானக் கட்டுரைகள்
விஞ்ஞானக் கட்டுரைகள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். உலகின் வியப்பூட்டும் உண்மைகளை சுருக்கமாக தருகிறது.தொகுப்பில் பல்வேறு பொருள்களில், 117 கட்டுரைகள் உள்ளன. ஆர்வமூட்டும் வகையில், ‘நிலாவின் வானத்தில் நாம்’ போன்ற தலைப்புகள் தரப்பட்டுள்ளன. விக்கல் ஏற்பட காரணம், கானல் நீர் எப்படி ஏற்படுகிறது, உலோகங்கள் குறித்த விபரம் மற்றும் புதிர் விலங்குகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. அறிய வேண்டிய அறிவியல் தகவல்களின் தொகுப்பு நுால்.– மலர்