/ பெண்கள் / விலக மறுக்கும் திரைகள்

₹ 150

இன்றைய சூழ்நிலையில், பெண்கள் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று முன்னேற எத்தனை சோதனைகளை தாண்ட வேண்டி இருக்கும் என பிரச்னைகளை விவாதிக்கும் நுால். மாதவிடாய் துவங்கி, அரசியல் அதிகாரம் பெறுவது வரை பல்வேறு நிலைகள் குறித்து விவாதிக்கிறது. சட்டம் இயற்றிவிட்டால் மட்டுமே ஆணவக் கொலைகளை தடுக்க முடியுமா என எழுப்பும் கேள்வி, சிந்தனையை துாண்டுகிறது. நவீன ஜாதி என்பது மேட்ரிமோனியல் வலை தளங்கள் வழியாக பாதுகாக்கப்படுவதை சுட்டிக் காட்டுகிறது. ஆணவக் கொலைகளுக்கு முக்கிய காரணமான ஆணாதிக்க மனப்பான்மையை சுட்டிக்காட்டி விவாதம் புரிகிறது. பெண்களை உடைமையாகக் கருதும் மனப்போக்கையும் சுட்டிக்காட்டுகிறது. காலத்திற்கேற்ற கருத்து பெட்டகமாய் மலர்ந்துள்ள நுால். – மதி


முக்கிய வீடியோ