/ கவிதைகள் / விளக்க முடியாத விந்தைகள்!
விளக்க முடியாத விந்தைகள்!
மனித நேயத்தை பறைசாற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். அன்னையின் கருணையை, ‘ஏழைகளின் துன்பம் நீங்க, ஏந்திய கையிலிருந்து இறங்கிய பணம் கணக்கில் அடங்காது!’ என வர்ணிக்கிறது. மனைவியை, ‘சுற்றுலகில் சுற்றி வரப் பார்க்கையில், நீ ஒரு தனிப் பிறவி; இறைவன் குறைவாக படைத்த மிகச் சிறந்தோரில் நீயும் ஒருத்தி’ என பாடப்பட்டுள்ளது. விவரிக்க இயலாத விந்தையாய் திகழும் இறை பேரருள் பற்றியும் கவிதைகள் உள்ளன. எழிலுக்கோர் உவமை இந்தியா, தமிழை மொழிந்தால் அமுது பொழியும், என் நாடு, சினத்தை வெல்லும் பொறுமை, புனித பயணம், ஆகச்சிறந்த ஆளுமைகள் உட்பட பல பொருண்மைகளில் கவிதைகள் உள்ளன. படிப்போரை ஈர்க்கும் பாடல்களின் அணிவகுப்பாக மலர்ந்துள்ள நுால். – புலவர் சு.மதியழகன்




