/ ஆன்மிகம் / விநாயகரும் விநோதச் செய்திகளும்

₹ 90

விநாயகரின் தோற்றம் மற்றும் விநோத செயல்களை விவரிக்கும் நுால். விநாயகரின் இருப்பிடமான அசு, ஆல், ஆற்றங்கரை, முச்சந்தி பற்றி கூறப்பட்டுள்ளது. மனித உடல், யானை தலையுடன் அமைந்திருக்கும் உருவத்துக்கு கொழுக்கட்டை, தேங்காய் படைப் பதன் ரகசியத்தை விளக்குகிறது. வணங்குவோருக்கு கருணை உள்ளத்தோடு அருள் செய்வதை குறிப்பிடுகிறது. விநாயகர் தோப்புக்கரணம், வேதத்தில் கணபதி, பத்து தலை விநாயகர், எல்லோரா குகை குன்றில் விநாயகர், அரச மரத்தடி போன்ற தலைப்புகளில் செய்திகளை முன் வைக்கிறது. பரஞ்ஜோதி முனிவர் பற்றிய கதை மிகவும் சுவாரசியமாக கூறப்பட்டுள்ளது. விநாயகருக்கும், பிரணவத்திற்கும் உள்ள தொடர்பையும் அறிய தரும் நுால். – புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை