/ புத்தக மதிப்புரை / விருப்பாச்சியில் இராணி வேலுநாச்சியார்

₹ 250

போர்க்களத்தில் பெண்கள் களம் காண்பதில்லை என்ற வரலாற்று மாண்பை முறியடித்து 8 ஆண்டுகள் விருப்பாச்சியில் போர் பயிற்சி எடுத்தவர் வீர மங்கை வேலுநாச்சியார். ஆங்கிலம், உருது, தெலுங்கு மொழிகளையும் கற்று 'ஏட்டை பெண்கள் தொடுவது பாவம்' என்ற கூற்றை முறியடித்த பெருமை இவருக்கு உண்டு. ஆங்கிலேயர்கள் தன் கணவரை கொன்றதற்கு சபதம் ஏற்று, மருது சகோதரர்கள் துணையுடன் விருப்பாச்சி பாளையத்தில் இருந்து ஹைதர் அலி படையோடு சிவகங்கை சீமையை அவர் மீட்ட வரலாறே இந்நுால். வேலுநாச்சியாரின் வீரம் போன்றே விறுவிறுப்பாகவும், படிப்போருக்கு சுறுசுறுப்பையும் தருகிறது. ஒவ்வொரு தகவலுக்கும் பொருத்தமான புறநானுாற்று பாடல்கள், குறட்பாக்களை மேற்கோள் காட்டியுள்ளதுடன் இந்நுாலுக்கு அழகு சேர்க்கும் வகையில் பல வண்ண புகைப்படங்கள், சான்றாதாரங்களை ஆசிரியர் இணைந்திருப்பது சிறப்பு. – சிவசு