/ கம்யூனிசம் / எப்போது தணியும் இந்த சாதித் தீ?
எப்போது தணியும் இந்த சாதித் தீ?
ஜாதி வன்கொடுமைகளும், ஆணவக்கொலைகளும் நிகழ்வதை தோலுரித்து காட்டும் நாடக நுால். உயர் ஜாதியைச் சேர்ந்த பண்ணையார், வெறி பிடித்தவர். அவர் மகனும் வெறியுடையவன். அவன் படிக்கும் கல்லுாரியில் தன் வீட்டு வேலைக்காரன் மகனும் சேர்வதை அறிந்து, படிப்பு மற்றும் விளையாட்டு போட்டியில் வென்று விடக்கூடாதென ஆணவம் கொள்கிறான். தன் மாமன் மகளை திருமணம் செய்ய விரும்புகிறான். அவள், ஒழுக்கத்தில் சிறந்த வேலைக்காரன் மகனை காதலிக்கிறாள். பட்டம் பெற்ற வேலைக்காரன் மகன், கிராமத்தில் பாதிக்கப்பட்டோருக்காக போராடுவதை சுற்றி கதை நகர்கிறது. பெண்ணின் காதல் நிறைவேறியதா, நிலம் ஏழைகளுக்கு கிடைத்ததா என்பதை விறுவிறுப்புடன் விவரிக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்