/ கவிதைகள் / ஞானம் பேசுகிறது

₹ 270

வேத விளக்கத்தை பல கோணங்களில் சொல்லும் கவிதை நுால். அனுபவமே போதனை என்கிறது. சிறிய தொடர்களின் மூலம், கருத்துக்களை விளக்குகிறது. வேதனையில் யாருக்கும் பங்கு இல்லை, முள் செடியில் முந்திரி காய்க்காது, மணிமுடி அல்ல முள்முடி, கண்ணீர் விட்ட கடவுள், துாரம் குறையாத யாத்திரைகள் போன்ற, 25 தலைப்புகளில், சிந்தனையைத் துாண்டும் வகையில் அமைந்துள்ளன. ரகசிய குற்றவாளிகள் என உலகின் யதார்த்தத்தைச் சொல்கிறது. தாயன்பின் சிறப்பை இரைதேடும் கோழி, குஞ்சுகளைக் காப்பாற்றிய நிலையை வைத்து விளக்கியுள்ளது. குணம் ஒரு போதும் மாறாது என்பதை, முள் செடியில் முந்திரிக் காய்க்காது என்ற கவிதை விளக்குகிறது.உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை உள்ள படியே விளக்கும் நுால்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை