/ கட்டுரைகள் / யாரேனும் இந்த மெளனத்தைத் தகர்த்திருந்தால்...
யாரேனும் இந்த மெளனத்தைத் தகர்த்திருந்தால்...
பலாத்காரத்தில் இருந்து சிறுமியரை பாதுகாக்கும் வகையிலான விழிப்புணர்வு நுால்.சிறுமியரை சிதைக்கும் நடவடிக்கைகளை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ளது. மன ரீதியாக உரையாடல் வடிவில் கருத்துகளை எடுத்துரைக்கிறது. பாலியல் ரீதியாக சிறுமியருக்கு ஏற்படும் மன நெருக்கடியை தெளிவாக விவரிக்கிறது.பாதிக்கப்பட்டோருடன் உரையாடி நிலைமை அறிந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர், பொது வாழ்வில் ஈடுபடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. பலாத்கார நடவடிக்கையில் இருந்து சிறுமியரை பாதுகாப்பது குறித்து எடுத்துரைக்கும் நுால்.– மதி