/ உளவியல் / யதார்த்தம் பாலுவின் யதார்த்த சிந்தனைகள்..!

₹ 150

குடும்ப வாழ்வில் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்துள்ள நுால். கணவன் – மனைவி செயலளவில் ஏற்படும் பிரச்னையை சுலபமாக தீர்த்து விடலாம்; மனதளவில் ஏற்படுவதை மாற்றுவது கடினம் என்கிறது. மனம் விட்டுப் பேசுவதே தீர்வுக்கு வழி என கூறுகிறது. உலகம் சீராக இயங்க அலுவலகப் பணிகள் அலுவலகங்களில் மட்டுமே என்ற நிலை வர வேண்டும். அப்போதுதான் குடும்பங்களில் மகிழ்ச்சி உண்டாகும் என்கிறது. பெற்றோருடன் இணக்கம் காட்டுவோர் மட்டுமே கூட்டுக் குடும்ப வாழ்வுக்கு சிறப்பு சேர்ப்பர் போன்ற கருத்துகளை உடையது. அன்றாட பிரச்னைக்கு தீர்வு தேடும் நுால். – புலவர் சு.மதியழகன்


சமீபத்திய செய்தி