/ கதைகள் / யாத்திரை தொடர்கிறது...
யாத்திரை தொடர்கிறது...
கல்வி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டுள்ள நாவல் நுால். ஆங்கில வழி கல்வியை பின்பற்றும் தனியார் கல்வி நிறுவனத்தில் நடக்கும் இரண்டு நிகழ்வுகளை மையமாக கொண்டுள்ளது. பள்ளியில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களை முன்னேறச் செய்ய எடுக்கும் நடவடிக்கையால் வெற்றி கிடைப்பதை சுட்டிக்காட்டுகிறது. அதே நேரம் ஆங்கிலத்தை முதன்மையாக கருதும் ஆசிரியர், குறுக்கு வழியில் பாடங்களை கற்பித்து மோசடிகள் செய்வதை சுட்டிக்காட்டுகிறது. அதில் படிப்போர் கல்வியில் பின்தங்குவதை காட்டுகிறது. அது தவறான வழிக்கு துணை போவதை தோலுரிக்கிறது. சரியான கல்வி கொடுத்தால், நாடு வளர்ச்சி அடையும் என்பதை தந்து, கல்வி முறையில் மாற்றம் தேவை என வலியுறுத்தும் நுால். – டி.எஸ்.ராயன்




