/ கதைகள் / யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வதற்கு பணம் தேவை என்ற நிலை மாறி வருவதை கதைகள் கூறுகின்றன. எல்லாம் பணம் தான் என பெற்ற பிள்ளைகளே உதறும்போது, வித்தியாசமாக முடிவு எடுக்கும் பெற்றோரை மையமாக கொண்டுள்ளது புத்த தலைப்பில் அமைந்த கதை. சிக்கிம் தலைநகரை அணு அணுவாக வர்ணிக்கிறது காதல் கதை. அங்கே இருப்பது போன்ற எண்ணம் வரச் செய்கிறது. ஹிந்தி கற்பிப்பது பற்றிய, ‘ஜிக்கு’ கதை புல்லரிக்க வைக்கிறது. இளம் தலைமுறைக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. பரம்பரை பெயர்களை நினைவூட்டும் ‘மெய்யழகி’ கதை உணர்ச்சிப் பிழம்பாக இருக்கிறது. வார்த்தைகளின் வலி எத்தகைய கொடுமையானது என்பதை உணர்த்தும் கதை தொகுப்பு நுால். – சீத்தலைச்சாத்தன்




