Advertisement

மரணத்திற்கு அப்பால்


மரணத்திற்கு அப்பால்

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரணத்தைப் பற்றிய தகவல்களை தரும் நுால். பிறப்புண்டேல் இறப்பு உண்டு என்பதை புத்தர் கதைகள் விளக்குகின்றன. மரணம் என்றால் என்ன என்பது துவங்கி, மறு பிறப்பு உண்மையா என்ற தலைப்போடு நிறைவடைகிறது இந்த நுால். வினா – விடை பாணியில் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.அறிவியல் ரீதியான ஆய்வுகள், உடலில் இருந்து வெளியேறும் ஆன்மா, மரணத்தைச் சந்தித்த மனிதர்கள், மரணத்திற்குப் பின் அலசல், ஆவிகளின் பயணம், மறுபிறப்பு, பேசும் ஆவிகள் போன்ற தலைப்புகள் திகிலை ஏற்படுத்துகின்றன.இறப்புக்குப் பின் என்ன நடக்கிறது என்பதை, கடோபநிஷம் சொல்லும் கருத்துக்கள் வழி விளக்கப்பட்டுள்ளது. யமனும், நசிகேதனும் பேசும் உரையாடலாக விளக்கம் பெற்றுள்ளது. இறப்புக்கு அப்பால் வாழ்க்கை இருக்கிறது என ஆணித்தரமாக வலியுறுத்தும் நுால்.– பேராசிரியர் இரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்