Advertisement

குர்ஆன் பேசுகிறது


குர்ஆன் பேசுகிறது

₹ 110

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமியரின் புனித நுாலான குர் ஆன் கருத்தை விளக்கும் நுால்.இது மக்களுக்கு வழிகாட்டி, நன்மை தந்து, மகத்தான வெற்றியை அளிக்கும் என உரைக்கிறது. குர் ஆன் கருத்துக்கள் இருளை விலக்கி, பேரொளி பரவ செய்யும் என்கிறது. பொய்மை அகன்று உண்மை நிலையை புரிய வைக்கும் என விளக்குகிறது. வழிகாட்டல் சிறப்பான வாழ்வு தரும் என்கிறது.மின்னல், துாக்கம், கணவன் மனைவி, நெருப்பு, குழந்தை சிந்தனைகளை, 24 பகுதிகளாக பிரித்து, குர் ஆனில் சொல்லப்பட்ட செய்திகளை பகுத்து தந்திருக்கிறது. நற்காரியங்களை செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்கிறது. கருத்துகள் மனதில் தங்கி நிற்கின்றன. ஒவ்வொரு விவரிப்பும் எளிய தமிழ் நடையில் இருப்பதால் முழுமையாக உள்வாங்க முடிகிறது.– ஊஞ்சல் பிரபு

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்