Advertisement

யோகாசனம் பயிற்சியும் பலன்களும்


யோகாசனம் பயிற்சியும் பலன்களும்

₹ 70

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நினைவாற்றலை பெருக்கி, மன வளத்தை பராமரிக்கும் யோகா பயிற்சியை எளிய நடையில் எடுத்துரைக்கும் நுால். யோகாசனம் செய்யும் முன் சுவாச பயிற்சி, உடற்பயிற்சி, உடற்தகுதி, நோயாளிகளுக்கான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என சொல்கிறது. காலை சூரிய வணக்கம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய 10 நிலைகள், பிராணயாம பயிற்சியில் மேற்கொள்ள வேண்டிய நான்கு நிலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. பத்மாசனம், சித்தாசனம், புஜங்காசனம் உட்பட 66 ஆசனங்களின் பயிற்சி, தக்க படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன; ஆசனத்துக்குரிய பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. நீண்ட காலம் வாழ யோகாசனம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நுால்.– புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்