Advertisement

நலம் சொல்லும் யோகாவும் முத்திரைகளும்


நலம் சொல்லும் யோகாவும் முத்திரைகளும்

₹ 400

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடல், மனதை ஆரோக்கியமாக பேண உதவும் யோகாசனங்களை அறிமுகம் செய்யும் நுால். விளக்கப்படங்களுடன் தெளிவாக உள்ளது.அமைதியான வாழ்வுக்கு உடல்நலம் பேணுவது அவசியம். நடை, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் என உடலை பேண பயிற்சி முறைகள் உள்ளன. யோகாசனங்கள் உடலை ஆரோக்கியமுடன் பேணி சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது என எடுத்துரைக்கிறது இந்த புத்தகம்.சுவாசத்தை முறைப்படுத்துதல், முத்திரைகள், தியான பயிற்சி எளிய நடையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அமரும் நிலையில், நின்ற நிலையில், படுத்த நிலையில் என ஆசனங்கள் வகைப்படுத்தி விளக்கப்பட்டுள்ளன. இறுதியாக, முத்ரா சக்தி பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டும் வகையிலான நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்