/ பொது / 64 யோகினிகள் மர்மங்கள்!

₹ 275

சக்தி தெய்வ வழிபாடு பழங்காலத்திலே உள்ளது. குடும்பங்களில், ‘இல்லுறை தெய்வம்’ என, கண்ணகியை வழிபட்டுள்ளனர். கொற்றவை, மாரியம்மன் தெய்வ வழிபாடு, கோவிலில் உள்ளது என, 64 யட்சிணி, யோகினி, டாகினியர் வரலாறு, வசியம், வழிபாடு பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார்.யோகினிகள், தெய்வங்களா, பரிவார தேவதைகளா, ஏவல், பில்லி, சூனியம், வசியம் செய்ய உதவும் கூலிப்படைகளா என ஆய்ந்துள்ளார். ஆடு, மாடு, மனிதன் என்று காளிக்கு பலி தரும் வழக்கம், தத்துவம் பற்றியும் ஆராய்ந்துள்ளார்.ஆவுடையார் பெண் குறி. அதன் மீது எழுந்த லிங்கம் ஆண் குறி. ஆணும், பெண்ணும் கலப்பதே யோகம். இதையே யோகமாயாதேவி விளக்குகிறார். பல்வேறு யோகினியார் வடிவங்கள், நுாலின் கடைசி பக்கங்களில் காட்சி தருகின்றன. அற்புதமான ஆய்வு நுால்.– முனைவர் மா.கி.ரமணன்


வாசகர்கள் கருத்துகள் (2)

ARJUNSUNILAADHITHAN
டிச 15, 2025 12:50 PM

Hi


swaminathan jonesh
ஏப் 26, 2026 06:55 PM

No