/ ஆன்மிகம் / ஆதிசங்கரர் - வழியும் சொன்னார் வாழ்ந்தும் காட்டினார்
ஆதிசங்கரர் - வழியும் சொன்னார் வாழ்ந்தும் காட்டினார்
வேதம், யாகம் போன்றவை என்றென்றும் போற்றப்பட வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தும் நுால். ஸ்ரீஆதிசங்கரரின் அவதாரம் அதற்காகவே நிகழ்ந்ததை அருள்மொழிகள் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது. வேண்டாத குணங்களை கழிப்பதை விட்டு, வெளியே இருக்கும் பல விஷயங்களில் தேவை இல்லாமல் கவனம் செலுத்தி, காலத்தை வீணாக்குகிறோம் என்ற யதார்த்தத்தை உணர வேண்டும். எது நிலையானது என்பதை அறிய வேண்டும். எங்கே தொலைத்தோம்... எங்கே தேடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வலியுறுத்துகிறது. தீர்வு என்பது மனதுக்குள்தான் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் மனதை அறிய முயல வேண்டும். இது போன்ற ஆதிசங்கரரின் அருள்மொழிகள் கொட்டிக் கிடக்கும் நுால். –- இளங்கோவன்




