/ கட்டுரைகள் / அலட்சியமாக இருந்தால் இலட்சியத்தை அடைய முடியாது!

₹ 200

ஆழமான கருத்துகளை உடைய நுால். பெரும்பாலும் சொந்த வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை சொல்கிறதோ என எண்ண வைக்கிறது. சூது, முதலில் வெல்லும்; முடிவில் தலைகுனிந்து நிற்கும். சூது செய்தோர் நிம்மதியாக வாழ முடியாது என்று உரைப்பது நல்ல கருத்து. அருகில் இருக்கும் கடல்நீர் தாகத்திற்கு உதவாதது போல, போலி நண்பர்கள் இருப்பர் என்பதை புரிய வைக்கிறது.ஏழை மாணவனுக்கு, ஆசிரியர்கள் செய்த உதவி எப்படி உயர்த்தியது என்ற உண்மை கதை சொல்லப்பட்டுள்ளது. பணம் அதிகம் சம்பாதித்தால் நம்மை காக்காது; மாறாக அதை காக்க வேண்டிய நிலை வரும் என புரிய வைக்கிறது. இளைஞர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய கருத்துடைய நுால்.– சீத்தலைச்சாத்தன்


முக்கிய வீடியோ