/ கதைகள் / அன்னையைப் போல்...
அன்னையைப் போல்...
அரிய கருத்துகளை உள்ளடக்கி, 33 தலைப்புகளில் படைக்கப்பட்டுள்ள நுால். தாய்க்குப் பிடித்த ரோஜாப் பூவை கல்லறையில் வைத்துப் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சிறுமியைக் கண்ட அமெரிக்கப் பணக்காரர் உயிருள்ள தாய்க்குப் பிறந்த நாள் சொன்னதை உருக்கமாக முதல் கதையைச் சிறப்பாக எழுதியுள்ளார். அடுப்புச் சாப்பாடு செய்த விதமும், தற்கால உணவு சமைக்கும் விதமும் விளக்கி, தாயின் அன்பை வெளிப்படுத்தியுள்ளார். பெண்ணின் பெருமை, பெண்ணின் பாசம், சத்திரபதி சிவாஜியின் வீரத்தாய், பார்வதி தேவியின் ஆசி என்ற தலைப்புகளில் பெண்களின் சிறப்புகளையெல்லாம் எடுத்துக்கூறி எளிய நடையில் எழுதி உள்ளார். தாயின் சிறப்பை பறைசாற்றி சிறப்பாக பதிவு செய்துள்ள நுால்.– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்