/ புத்தக மதிப்புரை / அன்பும் ஆளுமையும்
அன்பும் ஆளுமையும்
இந்திய ஆட்சி பணியில் பெண் அதிகாரியின் சாகசங்களை தொகுத்து தரும் நுால். பெண் கதாபாத்திரத்தின் வழியாக கதை போல் நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. அரசு பணியின் போது ஏற்பட்ட சிக்கல்களை தீர்த்த வழிமுறைகள் தெளிவாக தரப்பட்டுள்ளன. பணிக்காலத்தில் களத்தில் பெற்ற படிப்பினைகள் கதை போல் விவரிக்கப்பட்டுள்ளன. சமூக பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்திய வழிமுறை, வளர்ச்சி பணிகளில் காட்டிய ஆர்வம், கனிமவளத்தை கொள்ளையடித்தவர்களை தடுத்தது என, நிகழ்வுகளின் பின்னணியுடன் உள்ளது. ஒவ்வொரு செய்தியும் உரையாடல் போல் தரப்பட்டுள்ளது. விறுவிறுப்பான நடையில் அமைந்த துணிச்சல் மிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பணி அனுபவ நுால். – சிவா




