/ யோகா / ஆரோக்கிய வாழ்வு தரும் அற்புத முத்திரைகள்
ஆரோக்கிய வாழ்வு தரும் அற்புத முத்திரைகள்
அரிதாகப் பெற்ற பிறவியை, பெரிதாகப் போற்றி பாதுகாத்து பெருவாழ்வு வாழ்வதற்கு உதவும் நுால்.பயம், கவலை, படபடப்பு, பொறாமை போன்ற எண்ணங்கள் அங்க அவயங்களை பொங்க வைத்து நோய்களை உடலில் தங்க வைத்து விடும். உணவும், உண்ணும் விதமும் நோய்களுக்கு காரணமாகின்றன. உடலும், உள்ளமும் சீரான வாழ்வே பெரும் பேறு.இதற்கு எளிதான பயிற்சி முறை முத்திரைகளை எல்லா வயதுள்ளோரும் செய்யலாம். முத்திரைகளை படத்துடன் விளக்கி, ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி விவரித்திருக்கிறது. உடலில் எல்லா அங்கத்திற்கும் ஏற்ற முத்திரைகள் விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நுால்.– டாக்டர் கார்முகிலோன்




