/ கட்டுரைகள் / அருளும் பொருளும்
அருளும் பொருளும்
மனதை மலர்ச்சியடைய வைக்கும் வகையில் சிந்தனையை துாண்டும் கருத்துகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். அருளும் பொருளும், திருவொற்றியூரில் திருவள்ளுவர் கோவில், ஆண்டவன் பிச்சையும் ஆவுடை அக்காவும், ஒன்றியூரும் வள்ளலாரும், வள்ளலார் போற்றிய வடிவேலர், திருவூடல் திருவிழா உட்பட அருள் நிறைந்த 14 தலைப்புகளில் அமைந்துள்ளன. பிரபல பாடகர் டி.எம்.எஸ்., குரலில் நெகிழ வைக்கும், ‘உள்ளம் உருகுதைய்யா...’ பாடல் ஒரு பெண் கவிஞரால் எழுதப்பட்டது போன்ற வியப்பூட்டும் செய்திகளுடன் உள்ளது. தமிழ் மொழியை சிறப்பித்த பெண் கவிஞர்கள் பற்றி புதுமையான தகவல்கள் நிறைந்துள்ளன. நேர்மையை கடைப்பிடித்து இறைவன் அருளை தேடி அடைவதால் சிறப்பான மகிழ்ச்சி கிடைக்கும் என விளக்கும் நுால். – சிவா




