/ கவிதைகள் / அருந்தமிழ் 50
அருந்தமிழ் 50
நம்பிக்கை ஏற்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். பழந்தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. மரபு, இலக்கண கட்டுப்பாடு இன்றி, எளிய நடையில் இயல்பாக 50 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. பறவை ஒலிகளை கேட்டு அதன் மீது கருத்துகளை ஏற்றி புனையப்பட்டுள்ள பாடல்கள் சுவாரசியம் குன்றாமல் உள்ளன. சூழலின் இயல்பை எடுத்துக்காட்டுகின்றன. வேலையில்லாமல் இருக்கும் வாலிபர்கள் பிரச்னையை தீர்க்கும் வகையில் பரிவுடன் புனையப்பட்டுள்ளது. மனம் என்ற நிலைக்கண்ணாடியை துாய்மையுடன் பராமரிக்க கூறுகிறது. முதியோர் இல்லம் உட்பட பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகள் சமூக பொறுப்பை வெளிப்படுத்துகின்றன. இனிமையும், பொறுப்பும் நிறைந்த கவிதை தொகுப்பு நுால். – ராம்




