/ ஜோதிடம் / ஸ்ரீநாராயண சித்தரின் ஜோதிட உபதேசங்கள்
ஸ்ரீநாராயண சித்தரின் ஜோதிட உபதேசங்கள்
ஜோதிட சாஸ்திரத்தை விளக்கும் நுால். லக்னம் கணிக்கும் முறை, நட்சத்திர பலன், நட்சத்திர திரிகோணம் கேந்திரம், கிரகம் ஆட்சி, உச்ச-நீசம், பகை அட்டவணை உள்ளது. திதி, கரணம், யோகம், நட்சத்திர பட்டியல் உள்ளது. குழந்தை பிறந்த தேதியில் ராசி, இருப்பு, நாழிகை அறிந்து அடங்கினால் லக்னம் என்கிறது. இல்லையெனில், எந்த ராசியில் நாழிகை அடங்குதோ அதுவே ஜென்ம லக்னம் என்கிறது.முதல் பிறவி மர்மம், ராசி பலன்கள், கிரக திரிகோணம் பற்றி விளக்குகிறது. இதய நோய் மர்மம், உயிரை மாய்த்துக் கொள்வோர் குறித்தும் விவரிக்கிறது. ஜோதிட திருப்பாவை லக்ன பலன்களை, 375 பாடல்களில் தருகிறது. ஜோதிடர்களுக்கு உதவும் நுால்.–முனைவர் கலியன் சம்பத்து