/ கதைகள் / ஒரு பள்ளி ஆசிரியரின் சுவையான அனுபவங்கள்!

₹ 200

வாழ்வில் கிடைத்த அனுபவங்களை சுவைபட தொகுத்து தந்துள்ள நுால். சிறு கதைகள் போல் உரையாடல்களுடன் படைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் என பணியாற்றிய போது சந்தித்த சம்பவங்களில் கற்றுக் கொண்ட பாடங்களை விவரிக்கிறது. தலைமையாசிரியரின் கெடுபிடிகளை சமாளித்த விதம் சுவாரசியமாக தரப்பட்டுள்ளது. சென்னையில் அரசு பணி ஏற்றபோது கிடைத்த அனுபவம் புதுமையாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்வும் கூர்ந்து கவனத்துடன், தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளரிடம் பெற்ற அனுபவத்தில் கற்றுக்கொண்டதும் சுவைபட பதிவாகியுள்ளது. வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சுயசரிதை போல் எழுதப்பட்டுள்ளது. அனுபவங்களின் தொகுப்பு நுால். – மதி


புதிய வீடியோ