/ வாழ்க்கை வரலாறு / டாக்டர் அம்பேத்கர் (பாகம் – 1)

₹ 350

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எளிய நடையில் அமைந்த நுால். அம்பேத்கரின் தந்தை ராம்ஜியின் போராட்டக்குணம் தான் அம்பேத்கருக்கு உந்துதலாக இருந்ததாக குறிப்பிடுகிறது. பிறப்பு அடிப்படையில் இழிவு படுத்தப்படுவதை எதிர்த்த நிகழ்வுகள் கூறப்பட்டு உள்ளன. அதனால் அடைந்த இன்னல்களும் தரப்பட்டுள்ளன. பள்ளியில், கிணற்றில் தண்ணீர் குடிக்க பட்ட அவமரியாதை என்று அனைத்தையும் எடுத்து கூறுகிறது. காங்கிரசில் தாழ்த்தப்பட்டோர் நிலையை எதிர்த்து, அம்பேத்கர் நடத்திய போராட்டங்களை தெளிவாக கூறுகிறது. அம்பேத்கரின் தியாக வாழ்க்கை நிகழ்வுகள் பல அத்தியாயங்களாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தீண்டாமை ஒழிப்பு செயல்பாடும் உள்ள நுால். – முகிலை ராசபாண்டியன்


முக்கிய வீடியோ