/ கட்டுரைகள் / எழுத்தே எமது ஆயுதம்

₹ 350

அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையுடன் இருப்பதையும், சுதந்திர போராட்டத்தில் இணைந்து செயல்பட்டதையும் கூறுகிறது. மத சிறுபான்மையினருக்கு உரிமையை உறுதி செய்ய அரசு வலியுறுத்துகிறது. நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சுவாமி விவேகானந்தர் சுட்டிக்காட்டியபடி வலியுறுத்துகிறது. வள்ளுவரை ஒரு மதத்திற்குள் சுருக்க வேண்டாம் என்கிறது. மேகாலயா பிரச்னை பற்றி அலசுகிறது. குடியுரிமை திருத்த சட்டம், சி.ஏ.ஏ., – என்.ஆர்.சி., – என்.பி.ஆர்., குறித்து விளக்கப்பட்டுள்ளது. வக்ப் திருத்த சட்ட மசோதா பற்றி கூறுகிறது. திருப்பரங்குன்றம் தீப பிரச்னை பற்றி பேசுகிறது. தமிழக அரசு இடஒதுக்கீட்டால் மக்களுக்கு கிடைத்த பலன்களையும் கூறும் நுால். – டி.எஸ்.ராயன்